Wednesday, June 27, 2012

பிசுபிசுத்த ஜனாதிபதி தேர்தலும், தன் தலையில் தானே மண் போட்டுக் கொண்ட பா.ஜ.க.வும்


http://iravinpunnagai.blogspot.in/நம்  நாட்டின் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் களம் ஆரம்பத்தில் நன்றாகவே கலைக்கட்டியது. (நம்ம TASMARK குடிகாரவங்க இல்லீங்க குடியரசுத் தலைவர் தேர்தல்தாங்க) தற்போது என்னவோ தெரியவில்லை பிசுபிசுத்து விட்டது. ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் என்பவர் உலக அரங்கில் மதிக்கப் படுபவராகவும், அரசியல்
சார்பற்றபவராகவும், ஊழல புகாரில் சிக்காதவராகவும் இருக்க வேண்டும். ஆனால் தேசிய முற்போக்குக் கூட்டணியில் நிறுத்தயுள்ள பிரணாப் முகர்ஜிக்கு உண்டா?

ஒரு தேசியக் கட்சியான பா.ஜ.க.ஆல் தனி வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. சில மாநிலக் கட்சிகள் அறிவித்த வேட்பாளரை ஆதரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டார்கள்.
திரு.மமதா பானர்ஜி அவர்கள் அறிவித்த உடனேயே பா.ஜ.க.வும் திரு.கலாம் அவர்களை  வேட்பாளராக அறிவித்திருந்தால், கலாம் அவர்களுக்கு ஆதரவு பெருகியிருக்கும். தமிழக கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க மற்றும் ஏனைய கட்சிகளும் வேறு வழியின்றி ஆதரவு வழங்கியிருப்பார்கள். திரு சங்மா அவர்களும் வேட்பாளர் களத்திலிருந்து கலாமிற்கு ஆதரவாக  விலகியிருப்பார். 

திரு.கலாம் அவர்கள் களத்தில் இருந்திருந்தால் காங்கிரசிற்கு மாபெரும் சவாலாக அது அமைந்திருக்கும். தற்போது திரு,பிரனாபை ஆதரிக்கும் பால் தாக்கரே, நிதிஷ் குமார் போன்றவர்களும் இவரை ஆதரித்திருப்பார்கள். முலாயமும் ஊழல வழக்கு, பணம் போன்றவற்றிக்காக பல்டி அடித்திருக்க மாட்டார். அப்படியே முலாயம் சிங் யாதவ் கட்சி மாறினாலும், அது திரு.கலாம் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்காது.

பா.ஜ.க. காலம் தாழ்த்தி ஆளும் கட்சி வேட்பாளரை அறிவிக்கட்டும் என காலம் தாழ்த்தி பிரனாப் முகர்ஜிக்கு வழிவிட்டு கலாமின் கதவை அடைத்ததுடனும் அல்லாமல் தங்கள் தலையில் தானே மன்னையள்ளிப் போட்டுக் கொண்டனர்.

எப்படியோ  காங்கிரஸ் இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுறும், வரும் 2015  பாராளுமன்றத் தேர்தலோடு சமாதியாகிவிடும் என்றும் இந்தியாவில் நேரு குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு ஏற்படும் என நினைத்தேன். 

ஆனால் பா.ஜ.க.வினர் வரலாற்றுப் பிழையச் செய்துவிட்டனர். இது திரு.நிதின் கட்கரியின் தவறான தலைமைப் பண்பையே காட்டுகிறது. இந்த லட்சணத்தில் அவரை இரண்டாவது முறையாக பா.ஜ.க.வின் தலைவராகத் தேர்தெடுத்து உள்ளனர். ஏற்கெனவே உயிர் ஊசலில் தள்ளாடிக் கொண்டிருக்கும் காங்கிரசிற்கு இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்  booster  கொடுத்து காப்பாற்றி தன் வாயில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளனர்.

எப்படியோ சோனியாவிற்கு ஏற்ற அடிமை பிரணாப் உருவில் கிடைத்து விட்டார். ஏற்கெனவே பிரதிபா பாட்டீல் இருந்தார். வேறுபாடு இவ்வளவு தான். ஏற்கெனவே உள்ள மண்மோகன் சிங் எனும் பூம் பூம் மாட்டுடன் அவரும் சேர்ந்து விட்டார். 

ஆனால் பிரணாப் குடியரசுத் தலைவர் ஆவார் என்பதில் நமக்கு துயர் நிறைந்தசெய்திதான். ஏற்கெனவே இவர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஈழத் தமிழர் படிகொலை, மீனவர் படுகொலை மற்றும் கச்சத் தீவுப் பிரச்சனைப் போன்றவற்றில் நமக்கு எதிராகவும் சிங்களனுக்கு ஆதரவாகவும் நடந்துகொண்ட சாணக்கியர் தானே இவர். 

நண்பர்களே தங்களது கருத்துரைகளை கீழே இந்த இரவுப் புன்னகையுடன் கலக்க விட்டுச் செல்லுங்கள்..

Saturday, June 23, 2012

பாலுணர்வுக்கும் உணவிற்கும் இடையே உள்ள தொடர்பு...


http://tamilvetrivel.blogspot.in/பொதுவாக உண்ணும் உணவுக்கும் நமது வெளிப்பாடுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. குறிப்பாக பாலுனர்விர்க்கும் உணவுப் பொருளுக்கும் நிறையவே தொடர்பு உள்ளது... ஏனெனில் நமது உண்ணும் உணவுப் பொருள்கள் தான் பாலுணர்வைக் கட்டுப்படுத்தும் ரசாயனத் தூண்டிகளைக் (Harmons) கட்டுப்படுத்துகிறது.


நாம் அனைவருக்கும் தெரிந்த பாலுணர்வைத் தூண்டும் உணவுப்  பொருள் முருங்கைக்காய் தான். முந்தானை முடிச்சியில் பாக்யராஜ் நமக்குத் தெளிவாகவே சொல்லியிருப்பார். இந்த முருங்கைக்காய் மட்டுமில்லாமல் சாக்கலேட், தேன், ஆப்பிள்கள், வெண்ணெய், தக்காளி, பாதாம், வாழைப் பூ, வாழைப் பழம் ஆகியவையும் நமது பாலுணர்வைத் தூண்டும் முக்கிய  உணவுப் பொருள்கள் ஆகும்.

மேலும்  இஞ்சியானது ஹார்மோன் சுழற்சியை மிகச்சிறந்த முறையில் தூண்டும். நாம் உணவில் வழக்கமாக சேர்க்கும் பூண்டு, ஏலக்காய், மிளகுக்கீரை, எலுமிச்சைப் போன்றவையும் ஹோர்மோன் தூண்டளுக்கு மிகச்சிறந்த உணவுகள்.

கிராமங்களில்  உணவில் காரம் சேர்த்தால் உடல் வலிமையாக இருக்கும் என்று அதிகமாக சேர்ப்பார்கள். ஆனால் மறைமுக காரணம் அது பாலுணர்வை அதிகரிக்கும் என்பதே உண்மை.

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். 

சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. 

வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.

மேற்சொன்ன உணவுப் பொருள்களை புதிதாக திருமனமாணவர்கள் அருந்த வேண்டாமே...

Tips:

மேலும் குளித்தவுடன் ஈரத்தளையுடனும், காலைக் கடனைக் கழிக்காமலும் உறவு கொள்ள வேண்டாம், ஏனெனில் இவை இரண்டும் உங்கள் ஈடுபாடு, கருத்தரித்தல் மற்றும் பிறக்கும் குழந்தையின் நலத்தையும் சிதைத்து விடும்...
பிறக்கும் குழந்தை ஊனமாகவும் பிறக்கலாம்...

Friday, June 22, 2012

ஐபோன்களிலும் வலைப்பதிவு​களை மேற்கொள்ளலா​ம்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வலைப் பூ(blogger) என்பது இன்று உலகளாவிய ரீதியில் பிரபல்யமாகக் காணப்படுவதுடன் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஒன்லைன் மூலம் மேற்கொள்ளகூடியதாகக் காணப்படும் வலைப்பூ பதிவுகள் இதுவரை
காலமும் கணணிகளைப் பயன்படுத்தியே நிர்வகிக்கக்கூடியதாகக் காணப்பட்டது.

ஆனால்தற்போது அப்பிள் நிறுவனத்தின் அற்புத தயாரிப்பான ஐபோன்களிலும் வலைப்பூக்களை நிர்வகிக்கக்கூடிய வசதியை தரக்கூடிய மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மென்பொருளானது ஐபோன்கள் தவிர்ந்த ஐபொட், ஐபாட் என்பவற்றிலும் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மென்பொருளினைப் பயன்படுத்தி வலையகத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

1. ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூ கணக்குகளைக் கையாளுதல்.
2. புகைப்படங்களை தரவேற்றம் செய்தல்.
3. லேபல்களை சேர்த்தல்.
4. இருப்பிடம் பற்றிய தகவல்களைச் சேர்த்தல்.
5.பதிவுகளை பதிவேற்றம் செய்தல் அல்லது தற்காலிகமாக சேமித்துவைத்தல்.
6. பதிவேற்றப்பட்ட அல்லது சேமிக்கப்பட்ட பதிவுகளை காட்டுதல்.

விடுதலைப் புலிகள் தயாரித்த பல்குழல் பீரங்கியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறது இராணுவம்

http://iravinpunnagai.blogspot.in/விடுதலைப்புலிகளனால் தயாரிக்கப்பெற்ற பல்குழல் எறிகணை செலுத்தி ஒன்றை முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் இராணுவம் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே நேரத்தில் ஆறு எறிகணைகளைச் செலுத்தக்கூடிய பல்குழல் எறிகணைகளை புலிகள் உள்ளூரில் தயாரித்துள்ளனர். 

இதனைக் கண்டு இராணுவத்தினர்
வியப்படைந்துள்ளதாக மேலும் அறி யப்படுகிறது.

இறுதி யுத்தத்தில் அவை பாவிக்கப்படவில்லை என்றும், இதனைப் புலிகள் ஏன் பாவிக்கவில்லை என்று தமக்குத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூரில் கிடைக்கும், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, இவ்வகையான கனரக ஆயுதங்களை புலிகள் மிக நுணுக்கமாக தயாரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர், புலிகளின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஒன்றையும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழனின்  படைப்புகள் தற்பொழுதுதான் உலகத்திற்கு வெளிவர ஆரம்பித்துள்ளது. காத்திருப்போம் இன்னும் எதுவரை என்று...
 


பல்குழல் எறிகணை செலுத்தி
முழுத் தோற்றம்
எறிகணை குண்டுகளை சோதனையிடும் ராணுவத்தினர்

Wednesday, June 20, 2012

மறக்கப்பட்ட நட்சத்திர உழைப்பாளி: திரு.தசரத் மான்ஜி

 திரு.தசரத் மான்ஜி தான் உருவாக்கிய மலைப்பாதை யார் இவர் ...!!!!!!! திரு.தசரத் மான்ஜி – மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி.

இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும்

தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.
  
பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் பாதையை 1981 ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.

இன்றைய நவநாகரீக மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல் இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும் அழிக்கிறான். மக்களுக்காக உழைத்த பெரியவர் திரு.தசரத் மான்ஜி அவர்களின் உழைப்பை நினைவுகூர்வதில் இந்த பதிப்பு மகிழ்ச்சியடைகிறது.

உழைப்பு  மட்டுமே உறுதி என்றான பிறகு உணவு ஏது, உறக்கம் ஏது... இன்று முதல் கடின உழைப்பிற்கு என்னையும் ஆட்படுத்த்ப் போகிறேன்...




Tuesday, June 19, 2012

டுவிட்டரில் நரேந்திர மோடியைத் தொடரும் 7 லட்சம் பேர்!

 Narendra Modi Crosses 713 763 Follow டுவிட்டரில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை 7 லட்சம் பேர் தொடர்கிறார்கள். இது மக்கள் மத்தியில் மோடிக்கு உள்ள வரவேற்பை காட்டுகிறது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டுவிட்டரில் உள்ளார். அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை
அவ்வப்போதே டுவிட்டர் மூலம் மக்களுக்கு தெரிவி்தது ஒளிவு, மறைவில்லா ஆட்சி நடத்தி வருகிறார். அவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக டுவிட்டரில் உள்ளார். டுவிட்டரில் பிரபலமான அரசியல் தலைவர் யார் என்றால் அது மோடி தான் என்பதில் சந்தேகமில்லை. இதை நிரூபிப்பது போன்று டுவிட்டரில் அவரை லட்சக்கணக்கானோர் தொடர்கின்றனர்.

11-11-2011 அன்று 4 லட்சம் பேர் மோடியை டுவிட்டரில் தொடர்ந்தனர். இந்த எண்ணிக்கை 3-3-2012 அன்று 5 லட்சமாகவும், 1-5-2012ல் 6 லட்சமாகவும் தற்போது 7 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. தற்பொழுது திரு.மோடி அவர்களை 7,13,763 பேர் பின் தொடர்கின்றனர். சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தாளை முன்னிட்டு மோடி டுவிட்டரில் தினமும் ஒரு விவேகானந்தரின் பொன்மொழி என்று ஒரு ஆண்டுக்கு இந்த வழக்கத்தை தொடர்வது என்று முடிவு செய்தார்.

அவர் குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்கள், செய்தி வெளியிடும் இணையதளங்கள், அவரது நல விரும்பிகள் மற்றும் தொண்டர்களை டுவிட்டரில் தொடர்கிறார். ஸ்டாண்டர்ட் அன்ட் பூவர் நிறுவனம் இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரித்தும் அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததை நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் உலகிற்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் இப்பொழுது மோடி அவர்களை பின் தொடர ஆரம்பித்துள்ளேன்...