ஒரே நேரத்தில் ஆறு எறிகணைகளைச் செலுத்தக்கூடிய பல்குழல் எறிகணைகளை புலிகள் உள்ளூரில் தயாரித்துள்ளனர்.
இறுதி யுத்தத்தில் அவை பாவிக்கப்படவில்லை என்றும், இதனைப் புலிகள் ஏன் பாவிக்கவில்லை என்று தமக்குத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூரில் கிடைக்கும், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, இவ்வகையான கனரக ஆயுதங்களை புலிகள் மிக நுணுக்கமாக தயாரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர், புலிகளின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஒன்றையும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழனின் படைப்புகள் தற்பொழுதுதான் உலகத்திற்கு வெளிவர ஆரம்பித்துள்ளது. காத்திருப்போம் இன்னும் எதுவரை என்று...
பல்குழல் எறிகணை செலுத்தி |
முழுத் தோற்றம் |
எறிகணை குண்டுகளை சோதனையிடும் ராணுவத்தினர் |