Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

Friday, June 29, 2012

ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்

நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நான் நண்பர் இம்ரான் மூசா அவர்கள் ஈரான் நாட்டு தலைவரைப் பற்றிப் பகிர்ந்த ஒரு செய்தியைப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, இதனை நான் நமது இரவின் புன்னகை வழியாக நமது வலையுலக நண்பர்களுக்கும் இதனைப்பகிரலாம் என்றுத் தோன்றியது. ஈரான் நாட்டு அதிபரான முகம்மது  அஹ்மாதிநிஜாத் அவர்களைப் பற்றி அமேரிக்கா மற்றும் பல மேற்குலக நாடுகள் தவறான தகவல்களை ஊடகங்கள் வழியாக அனுப்பிக் கொண்டிருக்கின்றன...

ஆனால் அவரைப் பற்றிய சொந்த செய்திகள் மிகவும் வியப்பாகவும், விசித்திரமாகவும் இருந்தது.  படித்துவிட்டு தங்கள் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள்...

1 . அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது

2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்

3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

4 படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology

5 இவரது வங்கி நிலுவை 0

6 இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் .

7 அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8 பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..

9 பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10 தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைசீளைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்

11 நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாரம் .

படிப்பதற்கே  மிகவும் நன்றாக உள்ளது. இவரைப் பற்றித் தங்களுக்கு ஏதேனும் மேலும் அறிந்தால் கீழே கருத்துரையில் விட்டுச் செல்லுங்கள்...

Thursday, June 28, 2012

மூன்றே மூன்று நிமிடங்களில் ஓர் ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க‍ முடியுமா?

கூர்மையாக உற்று நோக்கி, உள்ளுணர்வையும், அறிவையும் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என் பதை கணித்து விடலாம்’ என்கி றார்கள், சில கில்லாடி பெண்கள்.
`அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத்தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது?
உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று நிமிடம் போதும்?’ என் று கேட்பவர்கள் ஏராளம்.-`நான்கு வருடங்கள் காதலித் தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்துபோனேன் ‘என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.

புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்து படியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என் பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமை யாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக அவளால் அறியப்பட்ட இளைஞன் மார்டனாக, பார்த்த மாத்திரத்தில் கவ ரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கி லத்தை தவழவிட்டபடி காணப்படுவது தான். நாலு மாத நட்பில் அந்தப் பெண்ணிடம் `அவன் யார்? எந்த ஊர்? பெற்றோர் எங்கிருக்கிறார் கள்? அவன் குடும்ப பின்னணி என்ன?’ என்று கேட்டுப் பாருங்கள்.

பாதிக்கேள்விக்கு அந்தப் பெண்ணிடம் விடை யிருக்காது. டிப்- டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரைப்போகிறது. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான். ஏமாந்த பெண்ணும் மனதுக்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கத் தொடங்கிவிடுகிறாள். நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடி யாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒரு வனை எப்படி சரியாககணிக்க முடியும்?

ஆனால் இன்றையபெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக் கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத் திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.

இப்போது ஆண்களை, பெண்கள் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு–பகல் பாராமல் அவன் பேசும் போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப் பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் பெண்கள் அப்படியே அவனை `கட்’ செய்துவிடுகிறார்கள்.

மாதக்கணக்கில் பழகியே ஆண்களின் கேரக்டரை கணிக்க முடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்துவிடமுடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது மனிதனின் மனம் குரங்கு போன்றது எப்போது எப்படி வேண்டுமானாலும் தாவும். அதனை நம்மைப் படைத்த பிரம்மனாலும்கணிக்க இயலாது என்பதே நிதர்சன உண்மை.

வாசகர்கள் தங்கள் கருத்துகளை கீழே தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி:

Wednesday, June 20, 2012

மறக்கப்பட்ட நட்சத்திர உழைப்பாளி: திரு.தசரத் மான்ஜி

 திரு.தசரத் மான்ஜி தான் உருவாக்கிய மலைப்பாதை யார் இவர் ...!!!!!!! திரு.தசரத் மான்ஜி – மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி.

இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும்

தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.
  
பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் பாதையை 1981 ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.

இன்றைய நவநாகரீக மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல் இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும் அழிக்கிறான். மக்களுக்காக உழைத்த பெரியவர் திரு.தசரத் மான்ஜி அவர்களின் உழைப்பை நினைவுகூர்வதில் இந்த பதிப்பு மகிழ்ச்சியடைகிறது.

உழைப்பு  மட்டுமே உறுதி என்றான பிறகு உணவு ஏது, உறக்கம் ஏது... இன்று முதல் கடின உழைப்பிற்கு என்னையும் ஆட்படுத்த்ப் போகிறேன்...




Tuesday, March 20, 2012

கண்ணாலே காதல் கவிதை...!

Awesome Eyesகாதலின் போது என்ன செய்தும் காதலியை கவர முடியவில்லை என்ற கவலையா உங்களுக்கு? பெண்களை கவர சில உற்சாகமான ஆலோசனைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். சில டிரிக்ஸ்களை உபயோகித்தால் பெண்களை எளிதில் கவர முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். முயற்சி செய்து பாருங்களேன்.


கண்களால் பேசுங்கள்

உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தும் பகுதி கண்கள். உங்களின் தேவைகளை கண்களால் உணர்த்துங்கள். அதேபோல் உதடுகளும் உங்களின் உண்மையான காதலை எளிதாக வெளிப்படுத்தும். கண்களில் தொடங்கி உதட்டில் முடித்தால் உங்கள் காதலில் உங்களிடம் சரண்டர்தான்.

கைகளால் காதல் செய்

உங்கள் கைகள் எதற்கு இருக்கின்றன. உங்கள் எண்ணத்தை எளிதாக வெளிப்படுத்துமே அவை. உங்கள் காதலி உங்களை தொட அனுமதித்திருக்கும் பட்சத்தில் கைகளால் விளையாடுங்கள். அது அவர்களை எளிதில் கவரும். உங்கள் உணர்வுபூர்வமான எண்ணத்தை எளிதில் வெளிப்படுத்தலாம்.

எதிர்பாராத ஸ்பரிசங்கள்

உங்கள் காதலியை தொடுவதற்கு அனுமதி அளிக்காத பட்சத்தில் எதையாவது கொடுக்கும் சாக்கிலோ, அல்லது உங்கள் காதலி எதிர்பாராத தருணங்களில் மெதுவாய் தொடலாம். இதுபோன்ற ஸ்பரிசங்களை ஒருவேளை உங்கள் காதலியே விரும்பலாம். இதுபோன்ற எதிர்பாராத ஸ்பரிசங்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம்.

வாசனை திரவியங்கள்

மனம் மயக்கும் வாசனை திரவியங்களை உபயோகியுங்கள். இந்த டிரிக் இரண்டாம் பட்சம்தான். உங்களின் உணர்வுபூர்வமான செயல்கள்தான் உங்கள் காதலியை கவரச்செய்யும். அதேசமயம் மென்மையான வாசனை தரக்கூடிய பெர்ப்யூம் உபயோகிப்பது ஒரு சில பெண்களை கவரும்.

உங்கள் காதலியை கவர இது போன்ற சின்ன சின்ன டிரிக்ஸ்களை உபயோகித்துப் பாருங்களேன் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

Monday, November 28, 2011

உந்தன் பிரிவும், உந்தன் நினைவும்


மனம் தவிக்கிறது
மனதில் அமைதி இல்லை;
புல்வெளியும், முல்படுக்கையாய்த் தோன்றுகிறது.
நடப்பது அனைத்தும் விரக்தியைத் தோன்றுகிறது
அடுத்து முன்னேற முடியவில்லை
வாழ்க்கையிலும்.
சோலைவனத்தையும்
பாலை வனமாக்கியது
உந்தன் பிரிவு.
காரனமரியாத் தவிப்பு
நெஞ்சு கனத்தது
கண்ணீர் நிரப்பியது கண்களை;
கண்களை மூடினேன்
உந்தன் பசுமையான நினைவுகள்
எந்தன் மனத்திரையில் ஓடியது.
மனம் நிறைவடைந்தது
உற்ச்சாகமானது,
என்னைச் சுற்றி அனைத்தும்
இன்பமயமாய்த் தோன்றியது.
உந்தன் பிரிவே எனக்கு நோயும் ஆனது
உந்தன் நினைவே அதற்க்கு மருந்தும் ஆனது...
மாலை மதியோ,
மேற்க்கு வானில்
கண்டும் காணாமலும் நகர்கிறான்
தினமும் என்னை நகைத்துக்கொண்டே...

வாக்கு மூலங்கள்:


 

என் செல்லமே, என் கண்ணே,

என் அன்பே...
என் கண்களுக்கு ஆணை இட்டேன்
நீ என்னைக் காணும் வரை விழித்திரு என்று,
கண்டு விட்டாய், இமைத்து விட்டேன்.

என் கால்களுக்கு ஆணை இட்டேன்
நீ வரும் வரை காத்திரு என்று,
வந்து விட்டாய், சென்று விட்டேன்.

என் மனதிற்கு ஆணை இட்டேன்
நீ நுழையும் வரை திறந்திரு என்று
நுழைந்து விட்டாய், அடைத்து விட்டேன்.

என் உயிருக்கு ஆணையிட்டேன்
நீ இறக்கும் வரை வாழ்ந்திரு என்று
இறந்து விட்டாய்- நான் மட்டும்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
இந்த கவிதை வாக்குமூலங்களுக்காக

இதோ
முடிந்தவுடன் இறந்துவிடுகிறேன்...
முடிந்தும் விட்டது!
நாளைய காதலர்கள்
இதற்கு தீர்ப்பெழுதட்டும்!
பாவம்,
அவர்களாவது ஆணையிடாமளிருக்க!!!

Tuesday, October 25, 2011

நிலா இருள்

http://iravinpunnagai.blogspot.in/2011/10/blog-post_26.html
பகலெல்லாம் திரிந்த சூரியனோ மேற்கில் மறைந்துவிட்டான்,

தொடு வானத்தில் தெரிந்த மதியோ உச்சிக்கும் வந்துவிட்டான்...

நள்ளிரவு பேச்செல்லாம் ஓய்ந்து விட்டது,

கோட்டானின் சத்தமும் அடங்கி விட்டது...

உலகமே சுகமாகத் தூங்குகிறது,

என்னைத் தவிர...

கால்கள் ஓய்வைத் தேடுகிறது,

மனம் மறுப்பதனால் திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருக்கிறேன்

மேகம் மறைத்த நிலா இருளில்,

நீ மறந்து போன நம் நேசத்தை எண்ணி...

Friday, October 7, 2011

எட்டாக் கனி


http://iravinpunnagai.blogspot.in/2011/10/blog-post_07.html 
காதல் வராத மனிதனென்று யாரும்
பிறப்பதில்லை இப் பூவுலகில்.
அது பிறக்கும் போதே
விதைக்கப் பட்டும் விடுகிறது.
மனதினுள் புகுந்து காதலை
பூக்கச் செய்யும் மழைத் துளிக்காகத்தான்
காத்திருக்கிறது எல்லா மனமும்.
கடந்து செல்லும் மேகங்களை
எல்லாம் உற்று நோக்கியபடி...
சிலருக்கு எளிதில் பூத்து விடுகிறது
பலருக்கு அது எளிதில் பூப்பதில்லை
எட்டாக்கனியாகவே உள்ளது...
காத்திருப்போம்
எட்டாக் கணியில் தானே சுவை அதிகம்......
தங்கள் வருகைக்கு நன்றி.!!!

Wednesday, October 5, 2011

பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனையொத்த நட்பு...

ஆயுத பூஜை திருவுவிழாவிற்காக ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை, அதிலும்  இந்த முறை பல்கலைக்கழகத்தில் எந்த வீட்டு வேலையும் கொடுக்காததால் மிகுந்த  மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நான், சற்று விரக்தியுடன் ஊருக்கு வந்தேன்.  காலையிலிருந்து அனைத்து
வேலைகளும் சிறிது மந்தமாகவே இருந்தது. அதிலும் இன்று காலையில் நண்பள் சரியாக பெசாததனால் பிடிப்பு இன்னும் குறைந்திருந்தது. இவள் பேசும்போது எதோ புதிதாக பழகும் நபரைப் போல் பேசினாள். இதனால் எனக்கு கோபமும், விரக்தியும் அதிகமாயிற்றே தவிர சிறிதளவும் குறையவில்லை. இவள் கடந்த சில வாரமாகவே இப்படித்தான் இருக்கிறாள், அதனால் நட்பு என்றாலே காவியங்கள், இலக்கியங்களில் தான் உண்மை என்று நினைத்திருந்தேன்.


இந்நிலையில் மாலை நேரத்தில் பாடல் கேட்டுக் கொண்டே ஓடையில் காலர நடந்துவிட்டு, மோட்டார் பம்பில் குளித்துவிட்டு வீடு வந்து கொண்டிருந்தேன். அப்போது பங்காளியுடன் சிறிது நேரம் உரையாடினேன், அப்போது அவர் எனக்கு ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறினார்.


எங்கள் கிராமம் சளையக்குறிச்சி. இங்கு காலனி தெருவில் வசிப்பவர் T.K என்ற தா.கருப்புசாமி. இவர் எனக்கு ஒரு வருடம் மூத்தவர், எனக்கு சிறிது பழக்கம். பள்ளியில் ஒன்றாக படித்துக் கொண்டிருந்தோம். நான் ஏழாவது படித்தபோது அவர் எட்டாவது படித்தார். தற்போது பெரம்பலூரில் இளங்கலைப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார், இந்நிலையில் இவர் காதலித்த பெண் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார், அவள் இறந்த பிறகு இவர் சற்று விரக்தியாகவும், வாழ்க்கையில் பிடிப்பு அற்றும் காணப் பட்டார்.


இப்படிப் பட்ட சூழ்நிலையில் இவர் இன்று காலையில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அதுவும் நஞ்சி(மருந்து)னை மதுவில் கலந்து வலி தெரியாமல் இறந்து போனான் இன்று. இவனது பிரிவினைத் தாங்க முடியாமல் இவனது நண்பன் ரவி என்பவன் இன்று நாணல் கயிறு இட்டுக் (நானுக்கிட்டான்-கிராமத்து வழக்கில்) கொண்டான். இவன் இறந்திருந்தாலும் பிரச்சனை இருந்திருக்காது, இவனது குடும்பம் சில நாள் அழுதுவிட்டு பிறகு பிழைப்பை பார்த்திருக்கும். அனால் இப்போது நிலைமை வேறு இந்த ரவி இறக்கவில்லை. இவன் திருச்சி K.M.C மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளான். பிழைப்பது கேள்விக்குறிதான் என்று மருத்துவமனையில் கூறிவிட்டனர். இவனது குடும்பத்திற்கு தற்போது சுமார் 2 இலட்சம் வீண் செலவு. இந்த பணத்தை ஈடு செய்வதே இவன் குடும்பத்திற்கு பல வருடங்கள் ஆகு. இந்த சரசுவதி பூசைதினத்தில் இந்த இருவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் மாபெரும் சோகம்...

இந்த சம்பவம் எனக்கு நிறைய கேள்விகளை எனக்கு எழுப்புகிறது:

௧.நண்பர்களுக்கு சிறிது நேரம் கூட நேரம் ஒதுக்க யோசிக்கும் இந்த வேகமான காலகட்டத்தில் நண்பன் பிரிவினை ஏற்றுக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறான் என்றால் அவனது நட்பு எவ்வளவு பெரியது.

௨.இவனது நட்பு மதிக்கத் தக்கது. அதே சமயம் இவன் இந்த முடிவினை அவசர துக்கத்தில் எடுத்துவிட்டனோ என்றும் தோன்றுகிறது? சிறிது அவன் குடும்பத்தைப் பற்றியும் யோசித்திருந்திருக்கலாம். அவசரப்பட்டுவிட்டான்...

௩.தனது நண்பனுக்காக தன் இன்னுயிரை, அவனது உயிரைக் காப்பாற்ற இவன் இழந்திருந்தால் இவனைப் பாராட்டலாம்.

இந்த செய்தி எனக்கு இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இவர்களின் நட்புடன் எனது நண்பர்களின் நட்பினை ஒப்பிடும் போது எம்மாத்திரம் என்று தோன்றுகிறது. நான் நண்பர்கள் என்று நினைக்கும் அனைவரிடமும் உண்மையாகத் தான் நடந்திருக்கிறேன். வாங்கித் தந்தாள்தான் நண்பன் என்று அங்கீகாரம் கிடைக்கும் இந்த நவீன நட்புக் கோட்பாட்டில் இந்த பிசிராந்தையார், கொப்பெரும் சோழன், போத்தையார் நட்பு, மற்றும் இந்த இருவரின் நட்பும் என்னை வியக்க வைக்கிறது.


- புறநானூறு (67)

அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாங் கையறுபு இனையக்
குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நண்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.

பொருள்:
புலவர் பிசிராந்தையார் கொப்பெரும் சோழனைப் பார்க்காமலே அவர் மீது பெரும் நட்பும், மரியாதையும் கொண்டார். மாமன்னன் சோழனது மகன்கள் தந்தை மீது நட்பும், பாசமும் கொள்ளாமல், ஆட்சியைப் பிடிப்பதிலேயே கவனமாக இருந்தனர். இதனைப் பார்த்து மனம் நொந்து போன சோழன், வடமலை சென்று வடக்கிருக்க முடிவு செய்தார். (வடக்கிருத்தல் என்றால் நம் தமிழ் மன்னர்கள் போரில் புற முதுகிட்டாலோ, அல்லது தொற்றாலோ, வடக்கு நோக்கி உண்ணாமல் இருந்து உயிர் விடுவர்). சோழனுடன் அவரது பிரதம அமைச்சருமான போத்தியார் வடக்கிருக்க புறப்பட்டார். இதனைக் கேள்விப் பட்ட புலவர் பிசிராந்தையார் அவருடன் வடக்கிருக்க முடிவு செய்து பயணப்பட்டார். இதற்க்கிடையில் அமைச்சரின் மனைவி கர்ப்பமாய் இருப்பது சோழனுக்கு தெரிய வந்ததால், நீ மகப்பேறு காலத்தில் நீ உன் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார். பிறகு மன்னர் மற்றும் பிசிராந்தையார் இருவரும் வடக்கிருந்து உயிர் விட்டனர். காலம் சென்றது. அமைச்சருக்கு ஒரு அழகான ஆண் குழைந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் போத்தியாரும் நண்பரின் துயர் தாங்காமல் வடக்கிருந்து உயிர் விட்டார்...

இதுதான் உண்மையான நட்பு. உலகிலேயே நிட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு.


நட்பு, தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும் நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இவர்கள் தான் உண்மையான நண்பர்கள்.

பேசுவதற்கே நேரம் இல்லை, மற்றும் பல சாக்குகளைக் கூறும் இந்த நவீன யுகத்தில் இவர்கள் எனது அணுகுமுறையை மறு பரிசீலனை செய்ய வைத்து விட்டனர்.