Tuesday, June 19, 2012

டுவிட்டரில் நரேந்திர மோடியைத் தொடரும் 7 லட்சம் பேர்!

 Narendra Modi Crosses 713 763 Follow டுவிட்டரில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை 7 லட்சம் பேர் தொடர்கிறார்கள். இது மக்கள் மத்தியில் மோடிக்கு உள்ள வரவேற்பை காட்டுகிறது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டுவிட்டரில் உள்ளார். அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை
அவ்வப்போதே டுவிட்டர் மூலம் மக்களுக்கு தெரிவி்தது ஒளிவு, மறைவில்லா ஆட்சி நடத்தி வருகிறார். அவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக டுவிட்டரில் உள்ளார். டுவிட்டரில் பிரபலமான அரசியல் தலைவர் யார் என்றால் அது மோடி தான் என்பதில் சந்தேகமில்லை. இதை நிரூபிப்பது போன்று டுவிட்டரில் அவரை லட்சக்கணக்கானோர் தொடர்கின்றனர்.

11-11-2011 அன்று 4 லட்சம் பேர் மோடியை டுவிட்டரில் தொடர்ந்தனர். இந்த எண்ணிக்கை 3-3-2012 அன்று 5 லட்சமாகவும், 1-5-2012ல் 6 லட்சமாகவும் தற்போது 7 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. தற்பொழுது திரு.மோடி அவர்களை 7,13,763 பேர் பின் தொடர்கின்றனர். சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தாளை முன்னிட்டு மோடி டுவிட்டரில் தினமும் ஒரு விவேகானந்தரின் பொன்மொழி என்று ஒரு ஆண்டுக்கு இந்த வழக்கத்தை தொடர்வது என்று முடிவு செய்தார்.

அவர் குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்கள், செய்தி வெளியிடும் இணையதளங்கள், அவரது நல விரும்பிகள் மற்றும் தொண்டர்களை டுவிட்டரில் தொடர்கிறார். ஸ்டாண்டர்ட் அன்ட் பூவர் நிறுவனம் இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரித்தும் அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததை நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் உலகிற்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் இப்பொழுது மோடி அவர்களை பின் தொடர ஆரம்பித்துள்ளேன்...

No comments:

Post a Comment