Friday, June 22, 2012

விடுதலைப் புலிகள் தயாரித்த பல்குழல் பீரங்கியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறது இராணுவம்

http://iravinpunnagai.blogspot.in/விடுதலைப்புலிகளனால் தயாரிக்கப்பெற்ற பல்குழல் எறிகணை செலுத்தி ஒன்றை முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் இராணுவம் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே நேரத்தில் ஆறு எறிகணைகளைச் செலுத்தக்கூடிய பல்குழல் எறிகணைகளை புலிகள் உள்ளூரில் தயாரித்துள்ளனர். 

இதனைக் கண்டு இராணுவத்தினர்
வியப்படைந்துள்ளதாக மேலும் அறி யப்படுகிறது.

இறுதி யுத்தத்தில் அவை பாவிக்கப்படவில்லை என்றும், இதனைப் புலிகள் ஏன் பாவிக்கவில்லை என்று தமக்குத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூரில் கிடைக்கும், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, இவ்வகையான கனரக ஆயுதங்களை புலிகள் மிக நுணுக்கமாக தயாரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர், புலிகளின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஒன்றையும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழனின்  படைப்புகள் தற்பொழுதுதான் உலகத்திற்கு வெளிவர ஆரம்பித்துள்ளது. காத்திருப்போம் இன்னும் எதுவரை என்று...
 


பல்குழல் எறிகணை செலுத்தி
முழுத் தோற்றம்
எறிகணை குண்டுகளை சோதனையிடும் ராணுவத்தினர்

4 comments:

  1. தன் வினை தன்னை சுடும் .ஆக்க பொருளை செய்ய வேண்டிய தமிழன் அழிவுப்பொருளை செய்ய தொடங்கியபோதுதான் அவர்களுக்கு அடங்கி போகும் நிலை வந்தது .

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் ஆயுதத்தை எடுக்கக் காரணம் யார். யாருமே காரணம் இல்லாமல் ஆயுதத்தை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்...

      Delete
  2. சிறப்பான பதிவு

    ReplyDelete