நம் நாட்டின் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் களம் ஆரம்பத்தில் நன்றாகவே கலைக்கட்டியது. (நம்ம TASMARK குடிகாரவங்க இல்லீங்க குடியரசுத் தலைவர் தேர்தல்தாங்க) தற்போது என்னவோ தெரியவில்லை பிசுபிசுத்து விட்டது. ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் என்பவர் உலக அரங்கில் மதிக்கப் படுபவராகவும், அரசியல்
சார்பற்றபவராகவும், ஊழல புகாரில் சிக்காதவராகவும் இருக்க வேண்டும். ஆனால் தேசிய முற்போக்குக் கூட்டணியில் நிறுத்தயுள்ள பிரணாப் முகர்ஜிக்கு உண்டா?
சார்பற்றபவராகவும், ஊழல புகாரில் சிக்காதவராகவும் இருக்க வேண்டும். ஆனால் தேசிய முற்போக்குக் கூட்டணியில் நிறுத்தயுள்ள பிரணாப் முகர்ஜிக்கு உண்டா?
ஒரு தேசியக் கட்சியான பா.ஜ.க.ஆல் தனி வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. சில மாநிலக் கட்சிகள் அறிவித்த வேட்பாளரை ஆதரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டார்கள்.
திரு.மமதா பானர்ஜி அவர்கள் அறிவித்த உடனேயே பா.ஜ.க.வும் திரு.கலாம் அவர்களை வேட்பாளராக அறிவித்திருந்தால், கலாம் அவர்களுக்கு ஆதரவு பெருகியிருக்கும். தமிழக கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க மற்றும் ஏனைய கட்சிகளும் வேறு வழியின்றி ஆதரவு வழங்கியிருப்பார்கள். திரு சங்மா அவர்களும் வேட்பாளர் களத்திலிருந்து கலாமிற்கு ஆதரவாக விலகியிருப்பார்.
திரு.கலாம் அவர்கள் களத்தில் இருந்திருந்தால் காங்கிரசிற்கு மாபெரும் சவாலாக அது அமைந்திருக்கும். தற்போது திரு,பிரனாபை ஆதரிக்கும் பால் தாக்கரே, நிதிஷ் குமார் போன்றவர்களும் இவரை ஆதரித்திருப்பார்கள். முலாயமும் ஊழல வழக்கு, பணம் போன்றவற்றிக்காக பல்டி அடித்திருக்க மாட்டார். அப்படியே முலாயம் சிங் யாதவ் கட்சி மாறினாலும், அது திரு.கலாம் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்காது.
பா.ஜ.க. காலம் தாழ்த்தி ஆளும் கட்சி வேட்பாளரை அறிவிக்கட்டும் என காலம் தாழ்த்தி பிரனாப் முகர்ஜிக்கு வழிவிட்டு கலாமின் கதவை அடைத்ததுடனும் அல்லாமல் தங்கள் தலையில் தானே மன்னையள்ளிப் போட்டுக் கொண்டனர்.
எப்படியோ காங்கிரஸ் இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுறும், வரும் 2015 பாராளுமன்றத் தேர்தலோடு சமாதியாகிவிடும் என்றும் இந்தியாவில் நேரு குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு ஏற்படும் என நினைத்தேன்.
ஆனால் பா.ஜ.க.வினர் வரலாற்றுப் பிழையச் செய்துவிட்டனர். இது திரு.நிதின் கட்கரியின் தவறான தலைமைப் பண்பையே காட்டுகிறது. இந்த லட்சணத்தில் அவரை இரண்டாவது முறையாக பா.ஜ.க.வின் தலைவராகத் தேர்தெடுத்து உள்ளனர். ஏற்கெனவே உயிர் ஊசலில் தள்ளாடிக் கொண்டிருக்கும் காங்கிரசிற்கு இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் booster கொடுத்து காப்பாற்றி தன் வாயில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளனர்.
எப்படியோ சோனியாவிற்கு ஏற்ற அடிமை பிரணாப் உருவில் கிடைத்து விட்டார். ஏற்கெனவே பிரதிபா பாட்டீல் இருந்தார். வேறுபாடு இவ்வளவு தான். ஏற்கெனவே உள்ள மண்மோகன் சிங் எனும் பூம் பூம் மாட்டுடன் அவரும் சேர்ந்து விட்டார்.
ஆனால் பிரணாப் குடியரசுத் தலைவர் ஆவார் என்பதில் நமக்கு துயர் நிறைந்தசெய்திதான். ஏற்கெனவே இவர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஈழத் தமிழர் படிகொலை, மீனவர் படுகொலை மற்றும் கச்சத் தீவுப் பிரச்சனைப் போன்றவற்றில் நமக்கு எதிராகவும் சிங்களனுக்கு ஆதரவாகவும் நடந்துகொண்ட சாணக்கியர் தானே இவர்.
நண்பர்களே தங்களது கருத்துரைகளை கீழே இந்த இரவுப் புன்னகையுடன் கலக்க விட்டுச் செல்லுங்கள்..
sஅறியாக சொன்னீர் நண்பா... நிதின் எடுக்கும் நடவடிக்கை மற்றும் அத்வானி அவர்களின் மத வெறியும் சரியில்லை....
ReplyDeleteநிதின் நடவடிக்கையே எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்தால் தானே சரியில்லை என கூறுவதற்கு. அத்வானி ஹிந்து மத நம்பிக்கை அதிகம், ஆனால் அவரை மத வெறியன் என்று கூற இயலாது நண்பரே.
DeleteTamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .
ReplyDeleteஎங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்
விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய
www.tamilpanel.com
நன்றி
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... எனது வலைதளத்தை நான் தங்கள் தளத்துடன் இணைத்துவிட்டேன்...
Delete