Friday, June 29, 2012

ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்

நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நான் நண்பர் இம்ரான் மூசா அவர்கள் ஈரான் நாட்டு தலைவரைப் பற்றிப் பகிர்ந்த ஒரு செய்தியைப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, இதனை நான் நமது இரவின் புன்னகை வழியாக நமது வலையுலக நண்பர்களுக்கும் இதனைப்பகிரலாம் என்றுத் தோன்றியது. ஈரான் நாட்டு அதிபரான முகம்மது  அஹ்மாதிநிஜாத் அவர்களைப் பற்றி அமேரிக்கா மற்றும் பல மேற்குலக நாடுகள் தவறான தகவல்களை ஊடகங்கள் வழியாக அனுப்பிக் கொண்டிருக்கின்றன...

ஆனால் அவரைப் பற்றிய சொந்த செய்திகள் மிகவும் வியப்பாகவும், விசித்திரமாகவும் இருந்தது.  படித்துவிட்டு தங்கள் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள்...

1 . அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது

2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்

3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

4 படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology

5 இவரது வங்கி நிலுவை 0

6 இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் .

7 அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8 பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..

9 பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10 தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைசீளைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்

11 நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாரம் .

படிப்பதற்கே  மிகவும் நன்றாக உள்ளது. இவரைப் பற்றித் தங்களுக்கு ஏதேனும் மேலும் அறிந்தால் கீழே கருத்துரையில் விட்டுச் செல்லுங்கள்...

Thursday, June 28, 2012

மூன்றே மூன்று நிமிடங்களில் ஓர் ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க‍ முடியுமா?

கூர்மையாக உற்று நோக்கி, உள்ளுணர்வையும், அறிவையும் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என் பதை கணித்து விடலாம்’ என்கி றார்கள், சில கில்லாடி பெண்கள்.
`அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத்தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது?
உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று நிமிடம் போதும்?’ என் று கேட்பவர்கள் ஏராளம்.-`நான்கு வருடங்கள் காதலித் தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்துபோனேன் ‘என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.

புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்து படியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என் பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமை யாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக அவளால் அறியப்பட்ட இளைஞன் மார்டனாக, பார்த்த மாத்திரத்தில் கவ ரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கி லத்தை தவழவிட்டபடி காணப்படுவது தான். நாலு மாத நட்பில் அந்தப் பெண்ணிடம் `அவன் யார்? எந்த ஊர்? பெற்றோர் எங்கிருக்கிறார் கள்? அவன் குடும்ப பின்னணி என்ன?’ என்று கேட்டுப் பாருங்கள்.

பாதிக்கேள்விக்கு அந்தப் பெண்ணிடம் விடை யிருக்காது. டிப்- டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரைப்போகிறது. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான். ஏமாந்த பெண்ணும் மனதுக்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கத் தொடங்கிவிடுகிறாள். நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடி யாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒரு வனை எப்படி சரியாககணிக்க முடியும்?

ஆனால் இன்றையபெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக் கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத் திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.

இப்போது ஆண்களை, பெண்கள் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு–பகல் பாராமல் அவன் பேசும் போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப் பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் பெண்கள் அப்படியே அவனை `கட்’ செய்துவிடுகிறார்கள்.

மாதக்கணக்கில் பழகியே ஆண்களின் கேரக்டரை கணிக்க முடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்துவிடமுடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது மனிதனின் மனம் குரங்கு போன்றது எப்போது எப்படி வேண்டுமானாலும் தாவும். அதனை நம்மைப் படைத்த பிரம்மனாலும்கணிக்க இயலாது என்பதே நிதர்சன உண்மை.

வாசகர்கள் தங்கள் கருத்துகளை கீழே தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி:

Wednesday, June 27, 2012

பிசுபிசுத்த ஜனாதிபதி தேர்தலும், தன் தலையில் தானே மண் போட்டுக் கொண்ட பா.ஜ.க.வும்


http://iravinpunnagai.blogspot.in/நம்  நாட்டின் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் களம் ஆரம்பத்தில் நன்றாகவே கலைக்கட்டியது. (நம்ம TASMARK குடிகாரவங்க இல்லீங்க குடியரசுத் தலைவர் தேர்தல்தாங்க) தற்போது என்னவோ தெரியவில்லை பிசுபிசுத்து விட்டது. ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் என்பவர் உலக அரங்கில் மதிக்கப் படுபவராகவும், அரசியல்
சார்பற்றபவராகவும், ஊழல புகாரில் சிக்காதவராகவும் இருக்க வேண்டும். ஆனால் தேசிய முற்போக்குக் கூட்டணியில் நிறுத்தயுள்ள பிரணாப் முகர்ஜிக்கு உண்டா?

ஒரு தேசியக் கட்சியான பா.ஜ.க.ஆல் தனி வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. சில மாநிலக் கட்சிகள் அறிவித்த வேட்பாளரை ஆதரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டார்கள்.
திரு.மமதா பானர்ஜி அவர்கள் அறிவித்த உடனேயே பா.ஜ.க.வும் திரு.கலாம் அவர்களை  வேட்பாளராக அறிவித்திருந்தால், கலாம் அவர்களுக்கு ஆதரவு பெருகியிருக்கும். தமிழக கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க மற்றும் ஏனைய கட்சிகளும் வேறு வழியின்றி ஆதரவு வழங்கியிருப்பார்கள். திரு சங்மா அவர்களும் வேட்பாளர் களத்திலிருந்து கலாமிற்கு ஆதரவாக  விலகியிருப்பார். 

திரு.கலாம் அவர்கள் களத்தில் இருந்திருந்தால் காங்கிரசிற்கு மாபெரும் சவாலாக அது அமைந்திருக்கும். தற்போது திரு,பிரனாபை ஆதரிக்கும் பால் தாக்கரே, நிதிஷ் குமார் போன்றவர்களும் இவரை ஆதரித்திருப்பார்கள். முலாயமும் ஊழல வழக்கு, பணம் போன்றவற்றிக்காக பல்டி அடித்திருக்க மாட்டார். அப்படியே முலாயம் சிங் யாதவ் கட்சி மாறினாலும், அது திரு.கலாம் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்காது.

பா.ஜ.க. காலம் தாழ்த்தி ஆளும் கட்சி வேட்பாளரை அறிவிக்கட்டும் என காலம் தாழ்த்தி பிரனாப் முகர்ஜிக்கு வழிவிட்டு கலாமின் கதவை அடைத்ததுடனும் அல்லாமல் தங்கள் தலையில் தானே மன்னையள்ளிப் போட்டுக் கொண்டனர்.

எப்படியோ  காங்கிரஸ் இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுறும், வரும் 2015  பாராளுமன்றத் தேர்தலோடு சமாதியாகிவிடும் என்றும் இந்தியாவில் நேரு குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு ஏற்படும் என நினைத்தேன். 

ஆனால் பா.ஜ.க.வினர் வரலாற்றுப் பிழையச் செய்துவிட்டனர். இது திரு.நிதின் கட்கரியின் தவறான தலைமைப் பண்பையே காட்டுகிறது. இந்த லட்சணத்தில் அவரை இரண்டாவது முறையாக பா.ஜ.க.வின் தலைவராகத் தேர்தெடுத்து உள்ளனர். ஏற்கெனவே உயிர் ஊசலில் தள்ளாடிக் கொண்டிருக்கும் காங்கிரசிற்கு இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்  booster  கொடுத்து காப்பாற்றி தன் வாயில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளனர்.

எப்படியோ சோனியாவிற்கு ஏற்ற அடிமை பிரணாப் உருவில் கிடைத்து விட்டார். ஏற்கெனவே பிரதிபா பாட்டீல் இருந்தார். வேறுபாடு இவ்வளவு தான். ஏற்கெனவே உள்ள மண்மோகன் சிங் எனும் பூம் பூம் மாட்டுடன் அவரும் சேர்ந்து விட்டார். 

ஆனால் பிரணாப் குடியரசுத் தலைவர் ஆவார் என்பதில் நமக்கு துயர் நிறைந்தசெய்திதான். ஏற்கெனவே இவர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஈழத் தமிழர் படிகொலை, மீனவர் படுகொலை மற்றும் கச்சத் தீவுப் பிரச்சனைப் போன்றவற்றில் நமக்கு எதிராகவும் சிங்களனுக்கு ஆதரவாகவும் நடந்துகொண்ட சாணக்கியர் தானே இவர். 

நண்பர்களே தங்களது கருத்துரைகளை கீழே இந்த இரவுப் புன்னகையுடன் கலக்க விட்டுச் செல்லுங்கள்..