அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாங் கையறுபு இனையக்
குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நண்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.
- புறநானூறு (67)
பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் நட்பைப்பற்றி சொல்லும் பாடல். பார்க்காமலேயே பழகாமலேயே நட்பு பூண்ட அதிசயம். அதுவும் அந்த காலத்திலேயே... எம் தமிழரின் சமூக வாழ்வும் மொழி வளமும் கவித்திறமும் திகைக்கச்செய்வன.
பொருள்:
புலவர் பிசிராந்தையார் கொப்பெரும் சோழனைப் பார்க்காமலே அவர் மீது பெரும் நட்பும், மரியாதையும் கொண்டார். மாமன்னன் சோழனது மகன்கள் தந்தை மீது நட்பும், பாசமும் கொள்ளாமல், ஆட்சியைப்பிடிப்பதிலேயே கவனமாக இருந்தனர். இதனைப் பார்த்து மனம் நொந்து போன சோழன், வடமலை சென்று வடக்கிருக்க முடிவு செய்தார். (வடக்கிருத்தல் என்றால் நம்தமிழ் மன்னர்கள் போரில் புற முதுகிட்டாலோ, அல்லது தொற்றாலோ, வடக்கு நோக்கி உண்ணாமல் இருந்து உயிர் விடுவர்). சோழனுடன் அவரது பிரதம அமைச்சருமான போத்தியார் வடக்கிருக்க புறப்பட்டார். இதனைக் கேள்விப் பட்ட புலவர் பிசிராந்தையார் அவருடன் வடக்கிருக்க முடிவு செய்து பயணப் பட்டார். இதற்க்கிடையில் அமைச்சரின் மனைவி கர்ப்பமாய் இருப்பது சோழனுக்கு தெரிய வந்ததால், நீ மகப்பேறு காலத்தில் நீ உன் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார். பிறகு மன்னர் மற்றும் பிசிராந்தையார் இருவரும் வடக்கிருந்து உயிர் விட்டனர். காலம் சென்றது. அமைச்சருக்கு ஒரு அழகான ஆண் குழைந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் அமைச்சரும் நண்பரின் துயர் தாங்காமல் வடக்கிருந்து உயிர் விட்டார்... இதுதான் உண்மையான நட்பு. உலகிலேயே நிட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு, இதனை விட வேறு எது?
No comments:
Post a Comment