Tuesday, March 20, 2012

டிராவிட்டுக்கு சிறந்த மாற்று விரர் கோஹ்லி தான்: கங்குலி புகழாரம்



இந்திய கிரிக்கட் அணியில் டிராவிட்டுக்கு சிறந்த மாற்று வீரராக கோஹ்லி திகழ்வார் என்று முன்னாள் இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழும் வீராட் கோஹ்லி, மிக சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 148 பந்துகளில் 183 ஓட்டங்கள் குவித்தார்.
கடந்த 5 போட்டிகளில் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த 28 ம் திகதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 86 பந்துகளில் 133 ஓட்டங்கள் குவித்தார். இதுவரை 85 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள அவர் 11 சதம் அடித்துள்ளார்.
கோஹ்லி குறித்து இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், சமீபத்தில் இந்திய கிரிக்கட் அணியில் இருந்து முழுவதுமாக ஒய்வு பெற்ற ராகுல் டிராவிட்டின் இடத்திற்கு ஒரு சிறந்த வீரர் கிடைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 148 பந்துகளில் 183 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்த கோஹ்லியைப் போன்றதொரு வீரரை இதுவரை என் கிரிக்கட் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்றும் கங்குலி பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

No comments:

Post a Comment